புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 4:00PM by PIB Chennai
தேசிய புள்ளியியல் அலுவலகம் 2026 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பதிவு செய்யப்படாத வேளாண் சாராத துறைகள் குறித்த காலாண்டு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
2026 ஜூலை முதல் செப்டம்பர் மாத காலகட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிறந்த வருடாந்திர வளர்ச்சி காணப்பட்டது. இது இத்துறையில் இதுவரை காணப்படாத மிக அதிக காலாண்டு வளர்ச்சியாகும்.
தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 9.47 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18.81 சதவீதம் அதிகமாகும்.
பதிவு செய்யப்படாத வேளாண் சாராத துறைகளில் வேலைவாய்ப்பு 15.03 கோடியை எட்டியது. இதில் இதர சேவைகளை துறை முக்கியப் பங்காற்றி 33 சதவீதத்திற்கும் மேலான வேலைவாய்ப்பு வளர்ச்சியை பதிவு செய்தது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 5 சதவீதம் அதிகரித்தது.
2026 ஜூலை முதல் செப்டம்பர் மாத காலகட்டத்தில் தொழில் நிறுவனங்களின் பதிவு 43.28 சதவீதம் அதிகரித்தது. இது 2025 ஜூலை முதல் செப்டம்பர் மாத காலகட்டத்தை விட 6 சதவீதம் அதிகமாகும்.
ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் தொடர்ந்து வரவேற்பை பெறுகின்றன. 10 நிறுவனங்களில் சுமார் 8 நிறுவனங்கள் (80 சதவீதம்) ரொக்கமில்லா பரிவர்த்தனை முறைகளை பின்பற்றுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340329®=3&lang=1
***
SS/IR/LDN/SH