சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2026 7:12PM by PIB Chennai
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனமானது, நாடு முழுவதிலும் 23 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. திருநங்கைகள் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களுக்காகவும், சமூகப் பாதுகாப்பு தேசிய நிறுவனம், பல்கலைக்கழகங்களுடான நட்புறவை பலப்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுதில்லியில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், நேரடியாக 15 கல்வி நிறுவனங்களும், காணொலி வாயிலாக 8 நிறுவனங்களும் பங்கேற்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கிரைஸ்ட் பல்கலைக்கழகம், புதுதில்லியில் உள்ள ஜாமிய மிலியா பல்கலைக்கழகம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார்க் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 23 பல்கலைக்கழகங்களை சேர்ந்த பிரதிந்திகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், போதைப் பொருளை சார்ந்திருப்பவர்கள், திருநங்கைகள், மூத்தக் குடிமக்கள், யாசகர்கள் ஆகியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும், திறன் பயிற்சி அளிக்கவும் இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார். திருநங்கைகள், மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள், ஊரக வளர்ச்சித்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இடையே கொண்டு செல்வது அவசியம் என்றும் மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340028®=3&lang=1
***
SS/LN/GS