பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 10:50PM by PIB Chennai

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த திரு மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் அளிக்கப்படும்.

***

(Release ID: 2340145)

SS/IR/LDN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2340248) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam