கன்னடத் திரைப்படமான ‘ரூபி-கியூப்’ இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதையொட்டி படக்குழுவினர் கோவாவில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் திரைப்பட இயக்குநர் பி. சேஷாத்ரி, கதாநாயகி வைநிதி ஜகதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
தனக்கான கதைகளைத் தானாகத் தேடிச் செல்வதில்லை என்றும், தன்னை ஈர்க்கும் கதைகள் கிடைக்கும்போது மட்டுமே திரைப்படமாக உருவாக்குவதாகவும் இயக்குநர் பி. சேஷாத்ரி தெரிவித்தார். ‘ரூபி-கியூப்’ தனது 13-வது திரைப்படம் என்றும், இந்தியக் குடும்ப அமைப்பு, மனித உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உண்மை வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மனித வாழ்க்கை ரூபிக் கியூப் புதிரைப் போன்றது என்றும், அதில் பல வண்ணங்கள் இருப்பதைப் போல மனிதர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு உணர்வுகளும் பரிமாணங்களும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட கருத்தைத் திணிப்பதைவிட, பார்வையாளர்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்துவதே தனது படங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பற்றிப் பேசிய நடிகை வைநிதி ஜகதீஷ், திருமண வாழ்க்கையில் சிக்கல்களைச் சந்திக்கும் சித்ரா என்ற பெண்தான் இதில் மையக்கரு என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340015®=3&lang=1
****
SK/PLM/RJ