57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ஆண்கள் மட்டுமே ஆடிவந்த புலி நடனத்தில் சாதிக்கத் துடிக்கும் சிறுமி குறித்த ‘பாகுனி’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 6:10PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2340020Views: 4

ஒடிசாவின் தொலைதூரக் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி மினி, பாரம்பரிய புலி நடனமான ‘பாகா நாச்சா’வில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறாள். ஆண்களே பெரும்பாலும் ஆடிவந்த இந்த நடனத்தில் சிறுமி ஒருவர் பங்கேற்க விரும்புவதன் மூலம் பாலினப் பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பதே ‘பாகுனி’ (Dance Like a Tiger) திரைப்படத்தின் மையக்கருவாகும்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிதேந்திர மிஸ்ரா எழுதி, இயக்கியுள்ள இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் 57-வது சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), இன்று (2026 நவம்பர் 22) இப்படம் திரையிடப்பட்டது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ஜிதேந்திர மிஸ்ரா, திரைத்துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக அறிமுகமாகியிருப்பது தனக்கு முக்கியமான மைல்கல் என்று தெரிவித்தார். பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டிச் சாதிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் சப்யசாச்சி மிஸ்ரா, இப்படத்தில் பாரம்பரிய நடனக் கலைஞராக நடிப்பதற்காக 30 கிலோ எடையைக் குறைத்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். ஒடிசாவின் கலாச்சாரத்தை உலக அரங்கில் கொண்டு செல்ல இப்படம் வாய்ப்பளித்துள்ளதாக தயாரிப்பாளர் பார்த்தா பாண்டா கூறினார்.

பெண்களின் துணிச்சல், சமத்துவம், கலாச்சார அடையாளம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் இப்படம், உள்ளூர் கதைகளை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339972&reg=3

****

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340020
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026