57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

இந்தியாவில் திரைப்படப் படப்பிடிப்பு அனுமதிகள் எளிமையாக்கப்படுகின்றன சர்வதேசத் திரைப்படத் தயாரிப்புகளுக்கு புதிய வாய்ப்புகள்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 4:44PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2339997Views: 4

இந்தியாவை சர்வதேசத் திரைப்படப் படப்பிடிப்பு, தயாரிப்புக்கான முக்கிய மையமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து, 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

'படப்பிடிப்பு இனி எளிது: சர்வதேசத் திரைப்படத் தயாரிப்பு மையமாக மாறும் இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக இணைச் செயலாளர் திரு பிரிதுல் குமார், திரை தயாரிப்புத் துறைக்கான ஆஸ்திரேலிய அரசின் அமைப்பான ஸ்கிரீன் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி கிரெய்ன் பிரண்ட்சன், நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான அனுபம் கெர் ஆகியோர் பங்கேற்றனர். திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இந்தியா சினி ஹப் என்ற இணையவழித் தளம் மூலம், நகராட்சி அமைப்புகள், போக்குவரத்துத் துறை, ரயில்வே, தொல்லியல் துறை உள்ளிட்டவற்றிடம் படப்பிடிப்பு அனுமதிகளை ஒரே விண்ணப்பத்தில் சமர்ப்பித்து  அனுமதி பெறலாம். இதில் சுமார் 32 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப நிலையை அறியவும், கட்டணங்களைச் செலுத்தவும் வசதி உள்ளது. ட்ரோன் அனுமதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சர்வதேசப் படப்பிடிப்பு அனுமதிக்கான 28 நாள் காலவரம்பு, சராசரியாக 18 நாட்களாகக் குறைந்துள்ளது. இந்தியாவை அணுகும் வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 25 முதல் 30 என்ற அளவிலிருந்து 100 முதல் 200 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா–ஆஸ்திரேலியா கூட்டுத் தயாரிப்புகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக பிரண்ட்சன் தெரிவித்தார். இந்தியத் திரைப்படங்களை ஆஸ்திரேலியாவில் அதிகமானோர் விரும்பிப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் இயற்கைச் சூழல், உணவு, உடைகள், கலாச்சாரம் ஆகியவை திரைப்படத் தயாரிப்புக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குவதாக அனுபம் கெர் கூறினார். புதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒற்றைச் சாளர அனுமதி முறை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகள் சர்வதேசத் திரைப்படத் தயாரிப்புகளுக்கு இந்தியாவை விருப்பமான இடமாக மாற்றும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339937&reg=3

****

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339997
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026