57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம், மொழி, வாழ்வியல் கதைகளைச் சொல்லும் படங்கள் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 4:26PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2339979Views: 3

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரப் பாரம்பரியம், மொழி, சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன.

அசாம் மாநிலத்தின் கர்பி சமூகத்தின் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலைப் பேசும் ரெட் கார்பெட் (Red Carpet) என்ற அசாமிய ஆவணப்படம், இந்தியன் பனோரமா ஆவணப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் ஐமி பருவா இயக்கியுள்ளார். டோன்கமோகாம் கிராமத்தில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய ஆடை கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளம் வரை சென்ற பயணத்தை இப்படம் எடுத்துரைக்கிறது.

நெசவாளர்களின் திறமையையும் கலாசார அடையாளத்தையும் பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் வலியுறுத்தினார்.

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இயக்குநர் டுயு தாப்யோ இயக்கிய உரும் (Urum) திரைப்படம், இந்தியன் பனோரமா முழுநீளத் திரைப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மகளை இழந்த தந்தையின் துயரம், குற்ற உணர்வு, நினைவுகள், பழங்குடியின நம்பிக்கைகள் ஆகியவற்றை இப்படம் பேசுகிறது.

சிறுவயதில் ஜிரோ பகுதியில் பார்த்த உண்மைச் சம்பவமே இப்படம் உருவாகக் காரணம் என்று டுயு தாப்யோ செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். நிஷி பழங்குடியின மொழியில் படத்தை உருவாக்கியது, அந்த மொழியைப் பாதுகாக்கும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு இந்தியாவின் கதைகள் உலக அளவில் கவனம் பெற வேண்டும் என்றும், திரைப்படங்கள் பொழுதுபோக்கைத் தாண்டி சமூக மாற்றத்திற்கும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு ஸ்மிதா சைகியா தலைமையில் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339932&reg=3

****

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339979
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026