இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் இன்று 26,000 இடங்களில் சைக்கிள் பேரணி குஜராத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 12:36PM by PIB Chennai

உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கத்தின் 99-வது நிகழ்ச்சி, இன்று (22.11.2026) அரசியல் சாசன தினத்தைக் கொண்டாடும் வகையில் அமைந்தது. இன்று நாடு முழுவதும் 26,000 இடங்களில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. உடல்நலம், மக்களின் பொறுப்புகள், நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குஜராத்தின் காந்திநகரில் உள்ள தண்டி குடிர், மகாத்மா மந்திர் ஆகிய இடங்களில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் திரு மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உடல் ஆரோக்கியத்துடன், போதைப் பழக்கமற்ற இளைஞர் சமுதாயம் அவசியம் என்று தெரிவித்தார். சைக்கிள் ஓட்டுவதை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உடற்பயிற்சி ஒரு குறிப்பிட்ட நாளுடன் நின்றுவிடாமல் தினசரி பழக்கமாக வேண்டும் என்றும், சிறிய அளவிலான தனிநபர் முயற்சிகள் ஒன்றிணைந்தால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். காந்திநகரில் காலை 6.30 மணிக்கு குழு ஜூம்பா உடற்பயிற்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 2.5 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கத்தின் 100-வது சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி நவம்பர் 29-ஆம் தேதி ஒலிம்பிக் இயக்கத்தை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது.

2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339875&reg=3

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2339906) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी