தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் நலனும் தொழில் வளர்ச்சியும் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானவை : மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 1:41PM by PIB Chennai

தொழிலாளர் நலனும் தொழில் வளர்ச்சியும் நாட்டின் முன்னேற்றத்துக்கு இரு முக்கியத் தூண்களாக உள்ளன என்று மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 2025 நவம்பர் 21-ல் அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் ஓராண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, புதிய தொழிலாளர் சட்டங்கள் குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதுடன், தொழில் நிறுவனங்களின் நடைமுறைச் சுமைகளைக் குறைத்து வளர்ச்சிக்கும் வழிவகுப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை 2014-ல் 25 கோடியாக இருந்தது எனவும் இது 2026-ல் 101 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் 7 கோடி தொழிலாளர்களின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பேசுகையில், தொழிலாளர்களின் கண்ணியம், நலன், முன்னேற்றம் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையானவை என்றார்.

மாநாட்டில் வேலைவாய்ப்புக்கான திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் சீர்திருத்தங்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339467&reg=3&lang=1

(Release ID : 2339467)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339535) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati