சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 7:52PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமையில், மத்திய மேற்பார்வை வாரியத்தின் 32-வது கூட்டம் இன்று நடைபெற்றது. கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினத் தேர்வுத் தடைச் சட்டத்தின் அமலாக்கம் மற்றும் பரிசோதனைத் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மாறிவரும் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்பச் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தவும், பதிவுசெய்யப்பட்ட பரிசோதனை மையங்களில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஒரு அறிக்கையின்படி, தேசிய பிறப்பு பாலின விகிதம் 918-ஆகப் பதிவாகியுள்ளதுடன், பல மாநிலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திருமதி. அனுப்பிரியா படேல் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி. சாவித்திரி தாக்கூர் ஆகியோர் உரையாற்றுகையில், ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டத்தின் பங்களிப்பையும், பாலின சமநிலையை உறுதி செய்ய சமூக மாற்றம் மற்றும் சமூகப் பங்கேற்பின் அவசியத்தையும் வலியுறுத்தினர். டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338726®=3&lang=1
***
TV/NB/SH