இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 6:13PM by PIB Chennai
குரு நானக் தேவ் பிறந்தநாளை, தேசிய சிறுபான்மையினர் ஆணையம், மிகுந்த பக்தியுடனும், மரியாதையுடன் கொண்டாடியது. அமைதி, நல்லிணக்கம், சமத்துவம், தன்னலமற்ற சேவை குறித்த அவரது காலத்தால் அழியாத போதனைகளுக்கு இந்த நிகழ்வின் மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, குரு நானக் தேவ் அவர்களின் போதனைகள் இன்றைய சமூகத்திற்கும் ஏற்புடையதாக உள்ளது என்று குறிப்பிட்டார். 'இறைவன் ஒருவனே' என்றும், அனைத்து மனிதர்களும் அந்த இறைவனின் பிள்ளைகளே என்றும் குரு நானக் தேவ் அவர்கள் என்றென்றும் அழியாத ஒரு செய்தியை மனிதகுலத்திற்கு வழங்கியுள்ளார் என்று திரு ரிஜிஜு கூறினார்.
இறைவனை நினைவுகூருதல், நேர்மையான உழைப்பு, மற்றவர்களுடன் பகிர்தல் ஆகியவற்றை குரு நானக் தேவ் அவர்கள் போதித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339212®=3&lang=1
****
TV/BR/SH