சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 4:22PM by PIB Chennai
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நிதி நெருக்கடிகள் பெரும் சவாலாக உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் சதோ கிராமத்தைச் சேர்ந்த ரோகித் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தின் உதவியுடன் கணினி அறிவியல் பொறியியல் படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ரோகித் குமாருக்கு, உயர்கல்விச் செலவுகளைச் சமாளிப்பது சவாலாக இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி, கல்விக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளைக் குறைத்து, அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தனது பொறியியல் படிப்பில் முழு கவனம் செலுத்த வழிவகுத்துள்ளது.
2027-ம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ள அவர், புரோகிராமிங், பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்தி வருகிறார். லீட்கோட் இருவாரப் போட்டியில் 2,410-வது இடத்தைப் பிடித்துள்ள இவர், 6.57 மதிப்பெண் குறியீட்டையும் பெற்றுள்ளார். இத்திட்டத்தின் நிதியுதவி இளைஞர்களின் தொழில்நுட்பத் திறனை வளர்த்து, எதிர்கால இலக்குகளை அடைய உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339071®=3&lang=1
***
TV/PD/SH