சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த திரிபுராவில் பிரத்யேக விடுதி கட்டப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 3:52PM by PIB Chennai

கிராமப்புறத்தில் வசிக்கும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள், தங்களது கல்வியை தொடர பாதுகாப்பான தங்குமிடம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், வடக்கு திரிபுராவில் உள்ள அலகாபூர் பகுதியில் மாணவர்கள் தங்கி கல்வி பயில்வதற்காக, விடுதி கட்டப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுச்சூழலில் கல்வி பயிலும் வகையில், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் 150 மாணவர்கள் தங்கி படிக்க முடியும். திரிபுரா மாநில ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த மாணவர் விடுதி, மின்சாரம், கழிப்பறை, சுத்தமான குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் செயல்பட உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என சமூக  சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339042&reg=3&lang=1

 

***

TV/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2339319) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी