வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் கூடுதலாக 1.25 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 3:22PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்ப்புறம்) 2.0 திட்டத்தின் கீழ், ஏற்கனவே 1.75 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 1.25 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2026 நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைச் செயலாளர் திரு சந்தேந்திர சிங் தலைமை வகித்தார். துறைசாந்த அதிகாரிகள், திட்ட இயக்குனர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நகர்ப்புற வீடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 1.75 லட்சம் வீடுகள் கட்ட ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 14,350 வீடுகளும், புதுச்சேரியில் 937 வீடுகளும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 1.25 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339014&reg=3&lang=1

 

***

TV/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339318) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी