சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 5:31PM by PIB Chennai
புதுடெல்லி சுஷ்மா சுவராஜ் பவனில் நடைபெற்ற மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இரண்டு நாள் துறைசார் மாநாடான ‘சமாவேஷி நீதி சங்கல்ப் 2026’ நிறைவு அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா மற்றும் 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேச அமைச்சர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், 'வளர்ச்சியடைந்த பாரதம் @2047' இலக்கை அடைய மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பிரதமர் வலியுறுத்தினார்.
நலத்திட்டங்களால் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், ‘போதைப் பொருள் இல்லா பாரதம்’ திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு விடுத்தார். டிசம்பர் 2026 முதல் மாதந்தோறும் 10-ஆம் தேதி ‘போதை ஒழிப்பு உறுதிமொழி தினமாக’ அனுசரிக்கவும், மார்ச் 2029-க்குள் அனைத்து மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள பிரெய்லி வசதியுடன் கூடிய மின்தூக்கிகள் தொட்டுணரும் நடைபாதைகள் மற்றும் இண்டக்ஷன் லூப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் மேம்பாடுகள் தேசிய அளவில் பாராட்டப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339157®=3&lang=1
****
TV/NB/SH