திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 5:34PM by PIB Chennai

மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மூலம் பிஎம்-சேது திட்டத்தின் கீழ், தெலங்கானாவில் உள்ள 4 தொழிற்பயிற்சி நிலைய தொகுப்புகளை மேம்படுத்த மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், தெலங்கானா அரசு, 4 முன்னணி தொழில் நிறுவனங்கள் இடையே பங்குதாரர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சுமார் ரூ.1,011 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ஓல்டு சிட்டி தொகுப்பிற்கு அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் ரூ.241 கோடியிலும், சங்கரெட்டி தொகுப்பிற்கு நியூலேண்ட் அறக்கட்டளை ரூ.241 கோடியிலும், மேட்சல் தொகுப்பிற்கு ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.254 கோடியிலும், படான்செரு தொகுப்பிற்கு ஸ்ரீ சித்தார்த்தா இன்ஃப்ராடெக் நிறுவனம் ரூ.275 கோடி மதிப்பிலும் தொழில் கூட்டாளிகளாக இணைந்துள்ளன.

இத்திட்டத்திற்காக அமைக்கப்படும் சிறப்பு நிறுவனத்தில் தொழில் நிறுவனத்திற்கு 51% பங்கும், மத்திய, மாநில அரசுகளுக்கு தலா 24.5% பங்கும் இருக்கும். பயிற்சி உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், தொழில்துறை தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்தல் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338605&reg=3&lang=1&_gl=1

***

TV/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2339087) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Urdu , हिन्दी , Telugu