ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை
azadi ka amrit mahotsav

பூச்சிக்கொல்லி உருவாக்க தொழில்நுட்ப நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 4:31PM by PIB Chennai

மத்திய ரசாயனம், உர அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பூச்சிக்கொல்லி உருவாக்க தொழில்நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. குருகிராமில் இயங்கி வரும் இந்த நிறுவனம், உயிரி ஊக்கி பரிசோதனை மற்றும் பகுப்பாய்வுக்காக, தேசிய பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்திடம் இருந்து அங்கீகார சான்றிதழை பெற்றுள்ளது. பகுப்பாய்வு திறன், சோதனை நெறிமுறைகள், ஆய்வக உள்கட்டமைப்பு போன்றவற்றை திறம்பட செயல்படுத்தியன் மூலம் பூச்சிக்கொல்லி உருவாக்க நிறுவனம் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் 2030 ஆகஸ்ட் 15-ம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி ஊக்கிகளின் தரம், பகுப்பாய்வு திறன் ஆகியவை தேசிய அளவில் கவனம் பெற இந்த அங்கீகாரம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338481&reg=3&lang=1

***

TV/LN/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2339064) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी