தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 4:47PM by PIB Chennai
தில்லியில் உள்ள முதன்மை தொலைத்தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பில், 2026 டிசம்பர் 4-ம் தேதி ஓய்வூதியதார்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தொலைத்தொடர்பு துறை, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில், தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் தொடர்பான புகார்கள், தீர்க்கப்படாத குறைகள் ஆகிவற்றுக்கு இந்த முகாம் மூலம் நேரடியாக தீர்வுகாணலாம். புதுதில்லி, பிரசாத் நகரில் உள்ள முதன்மை தொலைத்தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, 2026 நவம்பர் 27-ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும் எனவும் ஓய்வூதியதாரர்களை, தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338511®=3&lang=1
***
TV/LN/SU