சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 1:53PM by PIB Chennai
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெற்று வரும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அமைத்துள்ள சுகாதார அரங்கிற்குப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் ஐந்து நாட்களில் (நவம்பர் 14–18) 12,189-க்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டுள்ளனர். நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் எம். ஸ்ரீநிவாஸ், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா முன்னிலையில் நவம்பர் 14 அன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த அரங்கம், ‘இளைய இந்தியா, ஆரோக்கியமான இந்தியா’ என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 தேசிய சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பங்கேற்பு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 39 அரங்குகளில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண், பல் மற்றும் காது கேட்கும் திறன் உள்ளிட்ட இலவச மருத்துவப் பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், ஆயுஷ்மான் பாரத், இ-சஞ்சீவனி, டெலி-மானஸ் ஆகிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. காசநோய் ஒழிப்பு வீதி நாடகங்கள், மருத்துவர்களின் கலந்துரையாடல்கள், நேரடி சிபிஆர் (CPR) செயல்முறை விளக்கங்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறுவர்களுக்கான பிரத்யேக அரங்கமும் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. பொதுமக்களுக்கான இந்த சுகாதார அரங்கம் நவம்பர் 27, 2026 வரை திறந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338963®=3&lang=1
***
TV/SE/SU