இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 1:31PM by PIB Chennai
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண், அவரது மகள் ஆகியோரின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக கழிவுகள் சேகரிக்கும் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 14-ம் தேதி, பல்லப்கர் பகுதியில் தில்லி–மும்பை விரைவுச்சாலையில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நகராட்சி குப்பைக் கிடங்கில் பணிபுரிந்த அந்தப் பெண்ணின் உடலைப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி இறந்தவர்களின் உடல்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஹரியானா மாநில சுகாதாரத் துறைத் துறைச் செயலாளர், ஃபரிதாபாத் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338943®=3&lang=1
***
TV/PLM/SU