சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:39PM by PIB Chennai
தரமான கல்விக்கான அணுகலை மேம்படுத்தும் வகையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை, தேசிய தேர்வு முகமையுடன் (என்டிஏ) இணைந்து 2027-ம் ஆண்டிற்கான ஸ்ரேஷ்டா தேசிய நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது. பட்டியலினத்தவர், சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்குப் புகழ்பெற்ற தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2026 நவம்பர் 14 அன்று தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், நவம்பர் 30 இரவு 11.50 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள டிசம்பர் 2 முதல் 4 வரை வாய்ப்பு வழங்கப்படும். இத்தேர்வு 2027 ஜனவரி 10 அன்று நடத்தப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் https://exams.nta.nic.in/shreshta என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம், தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு shreshta@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 011-40759000 / 1800-180-4747 ஆகிய உதவி எண்களிலும், www.nta.ac.in என்ற இணையதளத்திலும் விவரங்களைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338617®=3&lang=1&_gl=1
****
TV/PD/SH