இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 3:35PM by PIB Chennai
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில், சொத்து உரிமையாளர்களுக்கான அடையாள அட்டைகள், ஆவணங்கள் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் 2026 நவம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ளது. பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜிவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் துறைசார்ந்த அதிகாரிகள், மாநில, யூனியன் பிரதேசங்களை சேர்ந்த முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், ஆணையர்கள், நில அளவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்களை ட்ரோன்கள் மூலம் அளவீடு செய்து, நில உரிமையாளர்களுக்கான சொத்து ஆவணங்கள், சொத்து அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கிராமப்புறங்களில் நில அளவீடு செய்யும் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி வைத்தார். கிராமப்புறங்களில் சொத்து உரிமையாளர்களுக்கு முறையான ஆவணங்கள் சென்றடையும் வகையிலான இத்திட்டம் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. அந்தவகையில், 3.31 லட்சம் கிராமங்களில் ட்ரோன் மூலம் நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. 2.13 லட்சம் கிராமங்களுக்கு சுமார் 3.45 கோடி சொத்து அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஹரியானா, உத்தரகாண்ட், கோவா, திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338440®=3&lang=1&_gl=1
***
TV/LN/SH