தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர், வேலைவாய்ப்பு, தொழில் துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 5:21PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர், வேலைவாய்ப்பு, தொழில் துறை அமைச்சர்களுக்கான 2 நாள் சிந்தனை முகாம் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் 2026 நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி நடைபெறும் இம்முகாமிற்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்கிறார். இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே-ம் இதில் பங்கேற்கிறார்.

சிந்தனை முகாமின் முதல் நாளில் தொழிலாளர் நலச் சட்டங்களின் அமலாக்கம், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகச் சீர்திருத்தங்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. இரண்டாம் நாளில் தேசிய தொழில் சேவை ஒருங்கிணைந்த இணையதளம், கைப்பேசி செயலி, குரல் வழி சேவை, தொழில்களுக்கான தேசிய வகைப்பாடு ஆகியவற்றை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338562®=3&lang=1&_gl=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2338719) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati