இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:46PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மக்களவைத் தலைமைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவைத் தலைமைச் செயலாளர் திரு பி. சி. மோடி ஆகியோரும் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தியின் திருவுருவப்படத்தை, அப்போதைய குடியரசுத் தலைவர் திரு ஆர் வெங்கட்ராமன் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 1987 நவம்பர் 19 அன்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338625®=3&lang=1
****
TV/PD/SH