இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 5:08PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ், மருத்துவமனைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு ‘ஆயுஷ் தரக் குறியீடு’ சான்றிதழ்களைப் புதுதில்லியில் இன்று வழங்கினார்.
ஆயுஷ் பொருட்கள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் நம்பகத்தன்மையை இக்குறியீடு உறுதி செய்கிறது என அமைச்சர் தெரிவித்தார். ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தரம், உற்பத்தித் திறன் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தைச் செயல்படுத்த AYUSHEXCIL அமைப்பிற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. WHO-GMP தரநிலைகள் மற்றும் வெளிப்படையான லேபிளிங் மூலம் சர்வதேச சந்தையில் போட்டித் திறனை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
சத் கர் சஞ்சீவன், ஸ்ரீ ஸ்ரீ வெல்பீயிங், SNA ஆயுர்வேத நர்சிங் ஹோம், ஹிசார் தேசிய ஆயுர்வேதக் கல்லூரி, அப்பல்லோ ஆயுர்வைத் மருத்துவமனை (2 பிரிவுகள்) ஆகிய மருத்துவமனைகளுக்கும்; அட்வென் பயோடெக் மற்றும் மகரிஷி ஆயுர்வேதா ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338541®=3&lang=1
****
TV/NB/SH