சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காற்று மாசுபாடு விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தில்லி - தேசிய தலைநகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 2:10PM by PIB Chennai

தில்லி - தேசிய தலைநகர் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் குளிர்கால செயல் திட்டங்களின் அமலாக்கம் குறித்து தில்லி, காசியாபாத், நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் உள்ளாட்சி அமைப்புகளுடன் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இதில் மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

குப்பைகள், காய்ந்த இலைகளைத் திறந்தவெளியில் எரிப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும், அனைத்து வார்டுகளிலும் விரைவு அதிரடிப் படைகளை அமைக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். சாலைப் புழுதியைக் கட்டுப்படுத்த இயந்திரத் துப்புரவு வாகனங்களை இயக்குவதுடன், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் தூசி உருவாகாத வகையில் விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு கண்டு, நேரடி ஆய்வுக்குப் பிறகே அவற்றை முடித்து வைக்க வேண்டும் எனவும், குளிர்காலம் முழுவதும் தொடர் கண்காணிப்பை அதிகாரிகளின் உறுதி செய்ய வேண்டும் எனவும் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338379&reg=3&lang=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2338693) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी