மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பன்மொழி செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த ‘பாஷினி’ பிரிவு மற்றும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 4:55PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு மற்றும் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, பன்மொழி செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளன.

'சேவா / சஞ்சலன்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தக் கூட்டாண்மை, இந்திய மொழிகளில் தொழில்நுட்ப கற்றல் கருவிகள் மற்றும் டிஜிட்டல் கற்றல் வளங்களை எளிதாக அணுக வழிவகை செய்யும்.

தற்போது 800-க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்களை இயக்கும் பாஷினி தளம், 36 இந்திய எழுத்து மொழிகள் மற்றும் 23 இந்தியக் குரல் மொழிகளை ஆதரிக்கிறது; தினமும் 2.4 கோடிக்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு கணிப்புகளை செயல்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338526®=3&lang=1

****

TV/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2338670) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी