சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்து கட்டமைப்பிற்கு மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2025-ஐ மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 11:15PM by PIB Chennai

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூகப் பொருளாதார சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தளங்கள் முக்கியப் பங்காற்றுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுதில்லி பாரத் மண்டபத்தில் ஓலா, உபர், ரேபிடோ, சொமேட்டோ, ஸ்விகி, போர்ட்டர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், செயலி அடிப்படையிலான சேவைகள் பயணிகள் போக்குவரத்தைத் தாண்டி பொருட்கள், உணவு விநியோக சேவைகளிலும் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஓட்டுநர்களின் நலன், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த 2025-ம் ஆண்டின் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள், 2025-ஐ மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சொந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்குக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 80% பங்கு, ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு, ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு, 24 மணி நேர குறைதீர்ப்பு அதிகாரி நியமனம் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பலன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்து, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய பங்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சாலை விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர்கள், பணியாளர்களைப் பாராட்டி அமைச்சர் கௌரவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338236&reg=3&lang=1&_gl=1   

***

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338652) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu