தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் சட்ட விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குஜராத் மாநிலம் பாவ்நகரில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 11:29AM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகமும், குஜராத் மாநில அரசின் தொழிலாளர் நலத்துறையும் இணைந்து பாவ்நகர் மாவட்டம் மஹூவாவில் உள்ள சர்தார் அரங்கில் தொழிலாளர் சட்ட விதிமுறைகள், தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு குறித்த தொழிலாளர் உரையாடல் என்ற மாவட்ட அளவிலான திறன் மேம்பாடு, விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் அரசு அதிகாரிகள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 150 பேர் பங்கேற்றனர்.

நான்கு தொழிலாளர் சட்ட விதிமுறைகள், அவற்றுடன் தொடர்புடைய  மத்திய அரசு விதிமுறைகள், குஜராத் மாநில அரசு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும், புரிதலையும் வலுப்படுத்துவது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இது தொழில் நிறுவன உரிமையாளர்களின் பொறுப்புகள், தொழிலாளர்களின் உரிமைகள், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338272&reg=3&lang=1

***

TV/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338645) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati , हिन्दी