இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 8:14PM by PIB Chennai
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், சிறந்த அறிவியல், சமத்துவத்தின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான முறையில், 2-வது உலகளாவிய மதிப்பீடு (ஜிஎஸ்டி-2) மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கியின் அன்டாலியாவில் நடைபெற்ற ஐ நா பருவநிலை மாற்ற மாநாட்டில் (சிஓபி 31) உயர்மட்ட அளவிலான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வளர்ச்சியடைந்த நாடுகள் முன்னின்று செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். புதுப்பிக்கப்பட்ட, தேசிய அளவிலான பங்களிப்புகள், 2 ஆண்டுகளுக்கான வெளிப்படைத்தன்மை அறிக்கைகள், உலகளாவிய தகவமைப்புக்கான இலக்கு, வளரும் நாடுகளின் அறிவியல் மதிப்பீடுகள் ஆகியவற்றின் முன்னேற்றத்தை ஜிஎஸ்டி-2-ல் மதிப்பிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டும் அபாயத்தை ஆராய்ந்து, பருவநிலை நிதி, தொழில்நுட்ப பரிமாற்றத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் தீர்வுகள் சார்ந்த முடிவுகளை 2-வது உலகளாவிய மதிப்பீடு வழங்க வேண்டும் எனவும் திரு பூபேந்தர் யாதவ் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338141®=3&lang=1
***
SK/PD/RJ