சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அரங்கு ரூ.29.56 லட்சம் விற்பனையை பதிவு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 7:14PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்று வரும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2026-ல், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அரங்கு நவம்பர் 17-ம் தேதி நிலவரப்படி சுமார் ரூ.29.56 லட்சம் மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது. முந்தைய நாளான நவம்பர் 16-ம் தேதி பதிவான ரூ.17.37 லட்சத்தை விட இது சுமார் 70 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டுத் தயாரிப்புகள் மற்றும் பாரம்பரிய கைவினைத் திறனுக்கு நுகர்வோரிடையே அதிகரித்து வரும் வரவேற்பை இது வெளிப்படுத்துகிறது.

அமைச்சகத்தின் மூன்று தலைமைக் கழகங்கள் வாயிலாக 19 மாநிலங்களைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் தங்களது கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்த ‘டியூலிப்’ (TULIP) வணிகப் பெயரை ஊக்குவிப்பதன் மூலம், கைவினைஞர்களுக்கு நிலையான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ இலக்கை நோக்கி அமைச்சகம் செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338106&reg=3&lang=1   

**

SK/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338591) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu