குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

45-வது இந்திய சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், காதி, கயிறு வாரிய அரங்குகளை மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 6:51PM by PIB Chennai

புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில், ‘குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் - வளர்ச்சியும் பாரம்பரியமும்’ என்ற கருப்பொருளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. ஜிதன் ராம் மாஞ்சி இன்று தொடங்கி வைத்தார்.  

நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, 42 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மொத்தமுள்ள 437 அரங்குகளில் 98%-க்கும் அதிகமானோர் முதல்முறை பங்கேற்பாளர்கள் ஆவர்; இதில் 57.87% பெண் தொழில்முனைவோரும், 27.73% பட்டியலின/பழங்குடியின தொழில்முனைவோரும் பங்கேற்றுள்ளனர்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளின் 15 அரங்குகள், கயிறு வாரியத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் 'காதி கி பாத்' பாட்காஸ்ட் அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338086&reg=48&lang=2   

***

SK/NB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338575) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी