அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் வணிகமயமாக்கலை விரைவுபடுத்த தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தங்கள்: சிஎஸ்ஐஆர் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 11:08AM by PIB Chennai

உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கலை விரைவுபடுத்த அறிவியல் & தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்) சார்பில் தொழில்நுட்ப பரிமாற்றம், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சி, புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் இன்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கிய மின் இணைப்புகளுக்கான அவசர மீட்பு அமைப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட ஜல்லிக் கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கற்கள், உயர் செயல்திறன் கொண்ட கான்கிரீட் சாலை தொழில்நுட்பம் ஆகியவையும், புதுதில்லி சிஎஸ்ஐஆர்-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் பிற சிஎஸ்ஐஆர் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிய மைக்ரோரியாக்ட்-ஆர்ஏபி, உயிரி தார் (பயோ-பிடுமென்) ஆகிய தொழில்நுட்பங்களும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டன.

மேலும், ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டின் உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையம், பாட்னாவின் பராகி திறன் அமைப்புகள் நிறுவனம் ஆகியவற்றுடன் சிஎஸ்ஐஆர்-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338251&reg=48&lang=1

***

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338329) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali