சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 5:27PM by PIB Chennai
கேரளம் மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் சினு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 47 வயதான இவருக்கு தூய்மைப் பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவு இல்லாததால், சுகாதாரமற்ற முறையில் பணி செய்ய முடியவில்லை. கழிவு, தூசி, தீங்குவிளைவிக்க கூடிய வாயுக்கள் ஆகியவற்றால், சினுவின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. நோய்த் தொற்று, சுவாசக் கோளாறு, தோல் பாதிப்பால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தார். உடல்நலப் பாதிப்பால் அடிக்கடி வேலைக்கு செல்ல முடியாமல் போனதால், வருமானமும் பாதிக்கப்பட்டது. இதனால், பொருளாதார சிக்கலையும் சந்தித்தார். இந்நிலையில், சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரச் சூழல் அமைப்புகான தேசிய திட்டத்தின் மூலம், முகக்கவசம், கையுறைகள், காலணிகள், பாதுகாப்பான உடைகள் ஆகியவை சினுவுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம், அவரது பணிச்சூழல் கண்ணியமாகவும், பாதுகாப்பானதாகவும் மாறியது. உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து பணிக்கு செல்வதால், அவரது வருவாயும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337988®=3&lang=1
***
SK/LN/RJ