இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 7:56PM by PIB Chennai
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, குஜராத்தின் வத்நகருக்கு வருகை தந்து, ஆன்மீகம், கல்வி, கலாச்சாரம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஹதகேஷ்வர் மகாதேவர் கோயிலில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வீக வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்ட விஸ்வ சாந்தி மகா யாகத்தில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட மக்களவைத் தலைவர், முதலமைச்சராகவும் பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் பொதுச் சேவையாற்றியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியின் மைல்கல்லைச் சுட்டிக்காட்டி, இத்தகைய நீண்டகால அர்ப்பணிப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பெரும் ஊக்கமளிக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது என்று கூறினார். தனது வாழ்வின் தொடக்கக் கட்டத்தில் பொருளாதார, சமூகச் சவால்களை நேரில் அனுபவித்த பிரதமர், அவற்றிலிருந்து பெற்ற புரிதலைக் கொண்டு, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, தன்னிறைவு பெற்ற இந்தியாவைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338131®=48&lang=2
***
SK/RB/RJ