திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, பொருளாதாரப் பங்களிப்பை மேம்படுத்த ஐநா சிறப்பு அறிக்கையாளருடன் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 5:20PM by PIB Chennai

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய திறன் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்பு, தொழில்முனைவுக்கான வழிகளை விரிவுபடுத்தவும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான ஐநா சிறப்பு அறிக்கையாளர் திருமதி ஹெபா ஹாக்ராஸுடன் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ஐநா சிறப்பு அறிக்கையாளருடனான இக்கலந்துரையாடலில், மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய பயிற்சி உள்கட்டமைப்பு, டிஜிட்டல் கற்றல் தளங்கள், உதவித் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திறன் மேம்பாட்டுச் சூழலில் அணுகல்தன்மையை இணைப்பதன் மூலம் கற்றலுக்கும், வாழ்வாதாரத்திற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலாளர் திரு நிரஞ்சன் குமார் சுதான்சு தெரிவித்தார். அரசு, தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், தொழில்முனைவோருக்கு நிதி, வழிகாட்டுதல், சந்தை வாய்ப்புகளை வழங்குதல், கிராமப்புற, மாற்றுத்திறனாளிப் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளைக் களைதல் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337978&reg=3&lang=1   

****

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338234) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी