இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு தின வினாடி-வினா போட்டி 2026-ல் பங்கேற்க மக்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 6:10PM by PIB Chennai

நவம்பர் 26-ம் தேதி கொண்டாடப்படும் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மைகவ் (MyGov) மற்றும் எனது பாரதம் (My Bharat) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படும் ‘அரசியலமைப்பு தின வினாடி-வினா போட்டி 2026’-ல் பங்கேற்குமாறு குடிமக்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இப்போட்டி 2026 நவம்பர் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மொத்தம் 500 வெற்றியாளர்களில், முதல் 100 பேருக்கு தலா ரூ.5,000-ம், அடுத்த 400 பேருக்கு தலா ரூ.2,000-ம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மின்னணுப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய லட்சியங்களைப் பறைசாற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு வரலாறு, வாக்குரிமை மற்றும் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ உருவாக்கத்தில் குடிமக்களின் கடமைகள் குறித்த தங்களது அறிவாற்றலை வெளிப்படுத்தவும், அவை குறித்து மேலும் விரிவாக அறிந்து கொள்ளவும் இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும் இப்போட்டியில், https://www.quiz.mygov.in   மற்றும் https://mybharat.gov.in/quizzes/yuva/ ஆகிய இணையதளங்கள் வாயிலாகப் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338056&reg=48&lang=2

****

SK/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338231) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी