இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 6:00PM by PIB Chennai
12-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐஐஎஸ்எஃப்) 2026-ன் முன்னோட்ட நிகழ்வு, அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் கையேட்டை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் புதுடெல்லியில் இன்று (நவம்பர் 18, 2026) தொடங்கி வைத்தார். ‘இந்தியாவின் அறிவியல், உலகின் எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் இத்திருவிழா டிசம்பர் 19 முதல் 22 வரை புனேவில் உள்ள ஐந்து முன்னணி ஆராய்ச்சி மற்றும் கல்வி வளாகங்களில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், அறிவியலை ஆய்வகங்களைத் தாண்டி மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் இளைஞர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘இந்தியா உலகின் நண்பன்’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டார்.
உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் விஞ்ஞான பாரதி அமைப்பு இணைந்து நடத்தும் இத்திருவிழாவிற்கு முன்னதாக, சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 26 நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் புத்தொழில் கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இவ்விழா, ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ இலக்கிற்கு வலுசேர்க்கும். இந்நிகழ்வில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், உயிரித் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் எஸ். கோகலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338038®=48&lang=2
****
SK/SE/RJ