இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 6:58PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள், 8-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தின் கீழும், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டாவின் துடிப்பான செயல்பாட்டின் கீழும், மருத்துவத் துறையில் நாடு அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். தற்போது தரமான சுகாதாரப் பராமரிப்பு, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
தொழில்நுட்பம் என்பது மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் உள்ள மனிதத் தொடர்புக்கு என்றுமே ஒரு மாற்று சக்தியாக இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடி முன்வைத்துள்ள 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர், ஆரோக்கியமான, கல்வியறிவு பெற்ற, அதிகாரமளிக்கப்பட்ட மக்களே இந்தியாவின் தேச முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குவார்கள் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338093®=3&lang=1
****
SK/RB/RJ