இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 7:53PM by PIB Chennai
2026-ஆம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில், புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில், சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை தொடர்பான உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொள்ளவிருக்கிறார்.
நவம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த துறைசார் உச்சிமாநாட்டில், சமூக நீதி, அதிகாரமளித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளைக் கையாளும் மாநிலங்களின் அரசியல் தலைவர்களும் அதிகாரளும் கலந்து கொள்வார்கள். கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்தவும், தேசிய முன்னுரிமைகளில் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்கவும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் இலக்குகளை விரைவாக அடையவும், பிரதமர் முன்னெடுத்துள்ள துறைசார் உச்சிமாநாடுகளின் வரிசையில் இது மூன்றாவது நிகழ்வாகும்.
இந்த உச்சிமாநாடு பின்வரும் நான்கு முக்கிய கருப்பொருட்களளில் கவனம் செலுத்தும்:
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான தடுப்பு மற்றும் போதைப்பொருள் தேவைக் குறைப்பு உத்தியை மறுவடிவமைத்தல்.
ஒரே நாடு, ஒரே கல்வி உதவித்தொகை இணையதளம் – எளிதில் அணுகக்கூடிய கல்வி உதவித்தொகைகள்; மாணவர்களுக்கு அதிகாரம் அளித்தல்.
ஆரம்ப நிலையிலேயே தலையிட்டு, மாற்றுத்திறன்களின் சுமையைக் குறைத்தல்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைவதற்கு, அனைவரையும் உள்ளடக்கிய அணுகல்தன்மை கொண்ட இந்தியா இந்தத் துறைசார் உச்சிமாநாடு, மத்திய, மாநில அரசுகள் தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும், முக்கியத் துறைசார் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338126®=3&lang=1
****
SK/RB/RJ