சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 7:54PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள், 8-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரோக்கியமான இந்தியா இன்றி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க முடியாது என்றும், எனவே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வலுவான, சமத்துவமான சுகாதார அமைப்பு மிகவும் அவசியம் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். பட்டம் பெறும் மருத்துவர்கள், தங்கள் தொழில்முறை அர்ப்பணிப்பு, சமூக சேவை மூலம், இந்த தேசிய இலக்கை முன்னெடுத்துச் செல்வதில் தங்களது முக்கிய பங்கை உணர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியல் பேசிய திரு ஜே.பி. நட்டா, கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை என்றாலும், மருத்துவத் தொழிலில் நுழைவதற்கான வாய்ப்பு என்பது ஒரு சிறப்புரிமை என்றும், அது சமூகத்தின் மீது ஆழ்ந்த பொறுப்பை உள்ளடக்கியது என்றும் வலியுறுத்தினார். பட்டதாரிகள் இந்தப் பொறுப்பை அர்ப்பணிப்பு, கருணை, நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், தங்கள் தொழில்முறை அறிவையும் திறன்களையும் மனிதகுலத்தின் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338127®=3&lang=1
****
SK/RB/RJ