தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆசியாவின் முதலாவது தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலத்திற்கான ஒப்பந்தக் கடிதம் வழங்கும் விழா மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 6:25PM by PIB Chennai

ஆசியாவின் முதல் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலத்தை குவாலியரில் அமைக்கும் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு நில ஒதுக்கீட்டுக்கான ஒப்பந்தக் கடிதம் வழங்கும் விழா போபாலில் நாளை (2026 நவம்பர் 19) நடைபெறுகிறது. மத்திய தகவல்தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ், குவாலியரில் 170 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இத்திட்டத்தின் முதல் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.493 கோடி நிதியுதவி அளிக்கிறது. மொபைல் சாதனங்கள், ஒளியிழை கேபிள்கள், 5ஜி மற்றும் 6ஜி தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்படும் இந்த மண்டலம், நாட்டின் உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பெரிதும் துணைபுரியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338073&reg=48&lang=2  

***

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338161) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी