சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் ஹபானியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கான 200 படுக்கைகள் கொண்ட விடுதித் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 6:15PM by PIB Chennai

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும், பாதுகாப்பான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தவும் திரிபுரா மாநிலம் ஹபானியாவில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கைகள் கொண்ட விடுதி அமைக்கப்படவுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் திரிபுரா அரசின் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தொலைதூரப் பகுதிகளில் இருந்து கல்வி பயில வரும் மாணவிகள் எதிர்கொள்ளும் தங்குமிடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம், மாணவிகளின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்குத் துணைபுரியும். குடிநீர், மின்சாரம், முறையான சுகாதார வசதிகள், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்படும் இந்த விடுதி, மாணவிகளிடையே தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும். வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பெண்களின் முன்னேற்றம், உள்ளடக்கிய கல்வியை உறுதி செய்வதில் மத்திய அரசின் தொடர் அர்ப்பணிப்பை இத்திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338065&reg=3&lang=1   

****

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338150) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी