சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காலநிலை மாற்றத்தை தாங்கும் உட்கட்டமைப்பிற்கான உலகளாவிய தளமாக இந்தியா திகழ்கிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 4:23PM by PIB Chennai

31-வது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு துருக்கியில் உள்ள ஆண்டல்யா நகரில், “காலநிலை மாற்ற பேரிடரை தாங்கும் உள்கட்டமைப்பு” என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்று பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதில் இந்தியாவின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். பேரிடரை தாங்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த சர்வதேச நடவடிக்கைகளுக்கு இந்தியா சிறந்த ஒத்துழைப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டார். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க அரசாங்கங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், வல்லுநர்களை ஒருங்கிணைப்பது அவசியம் என்றும், அதற்கு இந்தியா துணைநிற்கும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக வளரும் நாடுகளுக்கு நிதி, தொழிநுட்பப் பகிர்வு, திறன்மேம்பாடு ஆகிய அம்சங்களில் வளர்ந்த நாடுகள் உதவிபுரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். காலநிலை மாற்றத்தை தாங்கும் உட்கட்டமைப்பிற்கான உலகளாவிய தளமாக இந்தியா திகழ்கிறது என்றும் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337921&reg=3&lang=1

***

SK/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338148) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati