இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 6:06PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ், புதுடெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய யுனானி மருத்துவ நிறுவனத்தின் 13-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
பெங்களூருவில் உள்ள தேசிய யுனானி மருத்துவ நிறுவனத்தில் தற்போது 10 முதுகலைத் துறைகளில் 71 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், புதிதாக 5 முதுகலைத் துறைகள், 35 கூடுதல் இடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் துறையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு 24 இடங்களை ஒதுக்கும் பரிந்துரையையும் அமைச்சர் வரவேற்றார்.
தில்லி அருகே காசியாபாத்தில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி வசதிகளுடன் தேசிய யுனானி மருத்துவ நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. திட்டங்களைக் குறித்த நேரத்தில் முடித்தல், பொறுப்புடைமை மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் தரமான சிகிச்சை சென்றடைவதை உறுதி செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இத்தகவலை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338048®=3&lang=1
****
SK/NB/RJ