இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 4:43PM by PIB Chennai
மத்திய அரசின் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகளால், 2026-27-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் பொதுத்துறை வங்கிகள் வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளன. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக லாபம் அதிகரித்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 16.9 சதவீதம் உயர்ந்து ரூ.1,09,540 கோடியாகச் சாதனை படைத்துள்ளது. செயல்பாட்டு லாபம் 13.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.81 லட்சம் கோடியாக உள்ளது.
2026 செப்டம்பர் 30 நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வர்த்தகம் 15.5 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.301.6 லட்சம் கோடியாக உயர்ந்து, முதன்முறையாக ரூ.300 லட்சம் கோடி என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. மொத்த வைப்புத்தொகை 13.1 சதவீதம் அதிகரித்து ரூ.275 லட்சம் கோடியாகவும், மொத்தக் கடன் வழங்கல் 18.8 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.136.4 லட்சம் கோடியாகவும் உள்ளது. சில்லறை வர்த்தகம், வேளாண்மை மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைகளில் கடன் வளர்ச்சி சீராகப் பதிவாகியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட கடன் மதிப்பீடு நடவடிக்கைகளால், வாராக்கடன் அளவு வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் 1.69 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.33 சதவீதமாகவும் சரிந்துள்ளது. அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாராக்கடன் ஒதுக்கீடு விகிதத்தைப் பராமரிப்பதுடன், 16.89 சதவீத மூலதனப் போதுமான விகிதத்துடன் வலிமையாகச் செயல்பட்டு, ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ இலக்கிற்குத் துணை நிற்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337946®=3&lang=1
****
SK/SE/PS