சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காற்றுத் தரக் குறியீடு மேம்பட்டதையடுத்து, தில்லி-என்சிஆர் பகுதியில் தரப்படுத்தப்பட்ட எதிர்வினை செயல்திட்டக் கட்டுப்பாடுகள் நீக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 7:46PM by PIB Chennai

தேசிய தலைநகர் பிராந்தியம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் கீழ் செயல்படும் தரப்படுத்தப்பட்ட எதிர்வினை செயல்திட்ட துணைக்குழு, நவம்பர் 17, 2026 தேதியிட்ட தனது உத்தரவின் மூலம், அதன்  மூன்றாம் கட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. தில்லியின் காற்றுத் தரக் குறியீட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியின் தற்போதைய காற்றுத் தர நிலையை ஆய்வு செய்ய ஆணையத்தின் துணைக்குழு கூடியது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கிய வானிலை நிலவரங்கள், காற்றுத் தரம் குறித்த முன்னறிவிப்புகளையும் இந்தத் துணைக்குழு ஆய்வு செய்தது.

ஆய்வின் போது, ​​தில்லியின் காற்றுத் தரக் குறியீடு முன்னேற்றமடைந்துள்ளதாகவும், 17.11.2026 அன்று அது 204 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் துணைக்குழு கண்டறிந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம்,  இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் கணிப்புகளின்படி, வரும் நாட்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்/மிக மோசம்’ என்ற பிரிவிலேயே இருக்கக்கூடும் என்று தெரியவருகிறது. எனவே, காற்றுத் தர மேலாண்மைச் செயல்திட்டத்தின் கீழ், ‘கடுமையான’ காற்றுத் தர நிலையைக் குறிக்கும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தி, 06.11.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய துணைக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337619&reg=3&lang=1

***

SK/BR/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2338042) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी