சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 4:04PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம், ஜன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த இவர், உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார். போதிய நிதி இல்லாததால், உயர்கல்வி பயில பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், மத்திய சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தில் நிதியுதவி கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2020 நவம்பர் மாதம் முதல், ராஜேஷ் குமாருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன்மூலம் வீட்டு வாடகை, கல்வி கட்டணம் போன்ற தேவைகள் பூர்த்தியாகின. தக்க சமயத்தில் கிடைத்த இந்த உதவித்தொகையானது முனைவர் பட்டப்படிப்பை தொடர அவருக்கு உதவிகரமாக இருந்தது. இதன்மூலம், உயர்கல்வி கற்க வேண்டும் என்ற கனவு நனவானது. ராஜேஷ் குமார் தற்போது சுயநிதி கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போதைய பணியானது, அவரது கல்விப் பயணத்தை தொழில்முறை பங்களிப்பாக மாற்றியுள்ளது. இதன்மூலம் நிதிச் சுமையிலிருந்தும் அவர் விடுபட்டுள்ளார். கல்லூரியில் உதவிப் பேராசிரியராக வேண்டும் என்ற விருப்பம் கொண்ட ராஜேஷ் குமார், அப்பணிக்காக தனது படிப்பை தொடர்ந்து வருகிறார். பட்டியலின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பெற்ற கல்வி உதவித்தொகையானது ராஜேஷ் குமாரின் கல்வி பயணத்தில் முக்கிய பங்காற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337904®=3&lang=1&_gl=1
***
SK/LN/PS