வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியிலிருந்து மடகாஸ்கருக்கு முதல்முறையாக பிஸ்கட் ஏற்றுமதி: வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 8:10PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியிலிருந்து, மடகாஸ்கர் நாட்டிற்கு முதல்முறையாக பிஸ்கட் ஏற்றுமதியை தொடங்கி வைத்துள்ளது.

வாரணாசியைச் சேர்ந்த 'ஸ்ரீ திருப்பதி பாலாஜி இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் தயாரித்த இப்பொருட்கள், மகாராஷ்டிராவின் நவ சேவா துறைமுகம் வழியாக மடகாஸ்கரின் தமடாவே துறைமுகத்திற்குக் கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளன.

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த பிஸ்கட் ஏற்றுமதி ₹3,642 கோடியாக உள்ள நிலையில், மடகாஸ்கருக்கு மட்டும் ₹7.60 கோடி மதிப்பிலான பிஸ்கட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியா-மடகாஸ்கர் இடையேயான அபேடா பொருட்களின் மொத்த வர்த்தகம் ₹990 கோடியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337624&reg=3&lang=1

***

SK/NB/PS

 


(வெளியீட்டு அடையாள எண்: 2337968) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu