எல்லைகள், தலைமுறைகள், கலாச்சாரங்களைத் தாண்டிப் பயணிக்கும் கதைகளின் களமாகத் திரைப்படம் எப்போதும் திகழ்கிறது. ஆனால், ஒவ்வொரு திரைப்படத்தின் பின்னேயும் மற்றொரு கதை உள்ளது. அது திரைப்படத் தயாரிப்பாளர், படைப்பாற்றல் செயல்முறை, அதற்கான போராட்டங்கள், அதை உருவாக்கியவர்கள் பற்றியதாகும்.
இத்தகைய கதைகளை வெளிகொணரும் வகையில், இந்த ஆண்டு எல்லைகளற்ற கதைகள் என்ற தலைப்பின் கீழ் நடைபெறவுள்ள 57-வது சர்வதேச திரைப்பட விழாவில், திரைப்படம் பற்றி கூறப்படும் புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இதுவரை தயாரிக்கப்படாத திரைப்படங்கள் குறித்து கண்டறிய இந்தப் பிரிவு பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
திரைப்படத் தயாரிப்பின் கலை மற்றும் நுணுக்கங்களை பார்வையாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்கும் வகையில், கோவாவில் நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள 57-வது சர்வதேச திரைப்பட விழாவில், வரலாற்றிலேயே முதன்முறையாக திரைப்படங்களைப் பற்றிய திரைப்படங்கள் என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது.
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் ஆலோசனையின் பேரில், திரைப்படத் தயாரிப்பின் கலையை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் சேர்க்கப்பட்ட இந்தப் புதிய பிரிவில் ஐந்து சர்வதேசத் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜார்ஜியா, எஸ்தோனியா, துருக்கி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட, கூட்டாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படங்கள், உலக திரைப்படத்தை வடிவமைக்கும் வாழ்க்கை முறைகளையும் பாரம்பரியங்களையும் திரைப்படை ரசிகர்களுக்கு அரியதொரு பார்வையில் வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337830®=3&lang=1
***
SK/IR/SM/PS